கனடா

கனேடிய நிரந்தரக் குடியிருப்புக்காக விண்ணப்பிப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள் ஆகும்.

மேலும், ஜூன் 14 முதற்கொண்டு, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, அதாவது Biometrics விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும். ஏற்கனவே அவர்கள் தற்காலிக குடியிருப்பு அனுமதிக்காக Biometrics விவரங்களை சமர்ப்பித்திருந்தாலும், மீண்டும் அவர்கள் அவற்றை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கோவிட் காலகட்டத்திற்காக மட்டும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த Biometrics விவரங்களை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு நிலை உருவாகியிருந்தது. இப்போது கோவிட் காலகட்டம் முடிந்துவிட்டதால், கோவிட் காலகட்டத்திற்கு முன் நடந்ததுபோலவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர் தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, அதாவது Biometrics விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

Back to top button