சுவிட்சர்லாந்து

மீண்டும் சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வெளியான ஒரு மோசமான செய்தி!

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் கவலையை அதிகரிக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள். ஜூன் மாதம், பெடரல் வீட்டு வசதி அலுவலகம் இந்த வட்டி வீதத்தை 1.25 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவிகிதமாக உயர்த்தியது. தற்போது, அந்த வட்டி வீதம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆம், வட்டி வீதத்தை 1.5 சதவிகிதத்திலிருந்து 1.75 சதவிகிதமாக சுவிஸ் தேசிய வங்கி உயர்த்தியுள்ளது. விடயம் என்னவென்றால், இந்த மாற்றம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

மேலும், வட்டி வீதம் 1.5 சதவிகிதமாக உயர்ந்தாலே, வீட்டு வாடகைகள் சுமார் 3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என முன்னர் கூறப்பட்டது. இப்போது, அது 1.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாடகை மேலும் அதிகரிக்க உள்ளது. ஆனால், வாடகை எவ்வளவு உயர உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட தற்போது வாடகை மேலும் அதிகரிக்க உள்ளது, வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மற்றொரு பெரிய அடியாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஒரே ஆறுதலான விடயம் என்னவென்றால், பொதுவாக, சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை உயர்வு அக்டோபர் மாதத்தில்தான் அமுலுக்கு வரும் என்பதால், வரும் அக்டோபரில்தான் வீட்டு வாடகைகள் அதிகரிக்கப்பட உள்ளன. மேலும், வாடகை உயர்வு குறித்து, வீட்டு உரிமையாளர்கள், மூன்று மாதங்களுக்கு முன்பே வாடகைக்கு இருப்போருக்கு தெரிவிக்கவேண்டும் என்பதாலும், வீட்டு உரிமையாளர்கள், அக்டோபரில்தான் வீட்டு வாடகைகளை அதிகரிக்க முடியும். இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வீட்டு உரிமையாளர்களுக்கும் ஒரு மோசமான செய்தி உள்ளது. அதாவது, கடன் வாங்கி வீட்டைக் கட்டியுள்ள வீட்டு உரிமையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரிக்க உள்ளது என்பதுதான் அது.

Back to top button