ஏனையவை

சுடச்சுட பன்னீர் சீஸ் தோசை- செய்முறை இதோ

பொதுவாக நம் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய உணவுதான் தோசை. இதில் பல வகை உண்டு. முட்டை தோசை, மசாலா தோசை, நெய் தோசை இப்படி பல வகை தோசைகள் உங்களுக்கு செய்ய தெரியும். ஆனால் இன்று உங்களுக்காக நாங்கள் மிகவும் சுலபமாகவும் சுவையாகவும் செய்ய கூடிய பன்னீர் சீஸ் தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 6பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
பன்னீர் – 200 கிராம்
கொத்தமல்லி – தேவையான அளவு
சீஸ் – தேவையான அளவு

செய்யும் முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு பச்சை மிளகாய் இவை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் பன்னீரை துருவி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும், பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வெண்டும்.

இதன் பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் தோசை மாவை ஊற்றி சுற்றி வர நெய் ஊற்றி வேகவைத்தன் பின் வதக்கி வைத்த பன்னீர் கலவையை தோசையின் மேல் போட வேண்டும்.

பின்னர் சீஸ் துருவிப்போட வேண்டும், இவ்வாறு செய்து சுடச்சுட எடுத்து பரிமாறவும்.

Back to top button