36 மணி நேரம் கடும் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: நண்பர்கள் கூறும் சுவாரஸ்ய தகவல்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர் அவரது நண்பர்கள். பிரித்தானிய பிரதமர் ரிஷி, திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடமாட்டார் என்கிறார்கள் அவரது சகாக்கள். உண்மையில், வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை விரதம் இருப்பாராம் ரிஷி. அந்த நேரத்தில், அவர் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவாராம்.
ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் அவரது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் உதவுகிறது. ஆகவே, அவ்வப்போது அவர் விரதம் இருப்பது உண்டு என்கிறார்கள் அவரது நண்பர்கள். இதற்கிடையில், இப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ரிஷி, சட்டையில்லாமல் இப்படித்தான் இருப்பார் என கணித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது பிரித்தானிய ஊடகம் ஒன்று!
