சினிமா

மாறுவேடத்தில் தியேட்டருக்கு சென்ற அஜித்.. என்ன பாடம் பார்க்க சென்றார் தெரியுமா?

நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றி செட் ஆகிவிட்டால் ஒரே இயக்குனருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பார். அப்படி அஜித் உடன் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற பல படங்களில் பணியாற்றியவர் இயக்குனர் சரண். அஜித் உடன் பணியாற்றியது பற்றி பேட்டி கொடுத்திருக்கும் சரண் தான் அஜித் உடன் ஒரு படத்திற்கு சென்ற அனுபவம் பற்றி கூறி இருக்கிறார்.

அஜித் மற்றும் சரண் இருவரும் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் பார்க்க தான் தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர். யாரும் தன்னை அடையாளம் காண கூடாது என மாறுவேடத்தில் தான் அஜித் சென்றாராம். படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அஜித் படம் முடியும் சில நிமிடங்களுக்கு முன்பு கிளம்பி யாருக்கும் தெரியாத வகையில் வெளியில் சென்றுவிட்டாராம்.

Back to top button