சினிமா

கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் விஜய் மகன்: அஜித் செய்த உதவி என்ன தெரியுமா?

கோலிவுட்டிற்குள் என்றி கொடுக்கும் சஞ்சயிக்கு நடிகர் அஜித் கோல் செய்து பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “துணிவு” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான ஷீட்டிங் இடம்பெற்று வருகின்றது. இதில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இப்படியொரு நிலையில், அஜித்- விஜய் மகன் சஞ்சயிற்கு கோல் செய்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அதாவது, தமிழ் சினிமாவிற்கு என்றி கொடுக்கும் சஞ்சயின் படத்தின் ப்ரமோஷன் வேலைக்காக அஜித்தின் மேனேஜரிடம் படக்குழுவினர் உதவி கேட்டுள்ளனர். அப்போது விஜய் மகன் சஞ்சய் தான் படத்தின் இயக்குநர் என தெரிந்து கொண்ட அஜித் உடனே மேனேஜரிடம் சஞ்சயின் தொலைபேசி எண்ணை வாங்கி கோல் செய்துள்ளாராம். மேலும் சினிமா பயணம் ஆரம்பத்தில் இருக்கும் சஞ்சயிக்கு தன்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளாராம்.

Back to top button