சினிமா

அடேங்கப்பா.. சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்ட விஜய்- கடைசி படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விஜய் பார்க்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் சமிபத்தில் “லியோ” திரைப்படம் வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் மரண மாஸ் கொடுத்த இந்த திரைப்படம், சில விமர்சனங்களை கடந்து சென்றது.

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “ The Goat ” திரைப்படம் தயாராகி வருகின்றது.

விஜய்யின் கெரியரில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது.

தளபதி 69 சம்பளம்
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு The Goat திரைப்படத்தில் நடிப்பதற்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படமான “தளபதி 69” விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனவும் கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்திற்காக விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தொகை சம்பளம் விஜய் வாங்கினால் இந்தியளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் பார்க்கப்படுவார்.

எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Back to top button