சினிமா

தனது சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..! அரசியல் கட்சி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் தன்னுடைய அரசியல் வருகையை, கட்சி பெயரை வெளியிட்டு உறுதி செய்துள்ள நிலையில் தற்போது எக்ஸ் தளதத்தில் தன்னுடைய கட்சியின் பெயரில் கணக்கு துவங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ளது. நடிப்பில் ஒரு பக்கம் தளபதி தீவிர கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய அரசியல் வருகையையும் உறுதி செய்து வந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 3 ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் 3 ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இன்று பிப்ரவரி 2, அதிரடியாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளனர். அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தன்னுடைய அரசியல் வருகையை, கட்சி பெயரை வெளியிட்டு உறுதி செய்துள்ள விஜய் தற்போது எக்ஸ் தளதத்தில் தன்னுடைய கட்சியின் பெயரில் கணக்கு துவங்கியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Back to top button