சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாகும் மயிலின் மகள் ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சூர்யா ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளரும், ஜான்வி கபூரின் தந்தையான போனி கபூர் இந்த தகவலை ஒரு நேர்காணலில் கூறி உறுதிசெய்துள்ளார்.

Back to top button