சினிமா

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்… கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவருவது எப்படி?

விஜய்யின் கோட் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை திரையில் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் நடிகர் விஜய், தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அக்டோபர் மாதம் ஆரம்பி்க்கப்பட்ட நிலையில், இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கின்றார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தற்போது ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் தற்போது கோட் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் காட்சி அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டனின் கதாபாத்திரத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கவிருப்பதாகவும், விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக கேப்டன் விஜயாகந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி தான் படக்குழு இதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யும், விஜயகாந்தும் கடைசியாக செந்தூரப்பாண்டி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளதுடன், சுமார் 31 ஆண்டுகள் கழித்து தற்போது இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button