கனடா

கனடா மக்கள் செல்வாக்கை இழக்கும் பிரதமர்: வெடிக்கும் போராட்டங்கள்

சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தேர்தல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு எதிராக போராட்டம் மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக .இந்தியா – புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று (24.09.2023) .இந்திய – புதுடில்லி ஜந்தர் மந்தரில், ஐக்கிய ஹிந்து முன்னணி அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டக்காரர்கள் கனடா துாதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இராஜதந்திரப் போர்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18இல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இது பெரும் இராஜதந்திரப் போராக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Back to top button