ஏனையவை

Chocolate Chip Cookies வீட்டிலேயே செய்யலாம்

சிப்ஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், நாள் முழுவதும் வேலை செய்து மாலை நேரங்களில் டீ டைம் வந்துவிட்டால் சிப்ஸ் சாப்பிடுவதை எல்லோரும் வழக்கமாக வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சாக்லேட் கிப்ஸ் குக்கீஸ் மாலைநேரத்தில் ஒரு சிறந்த குக்கீஸ் ஆகும். இந்த சாக்லேட் சிப் குக்கீஸை எவ்வாறு வீட்டில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மைதா மா – 1 1/2 கப்
சோளம் மா – 2 தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
சக்கரை – கால் கப்
ப்ரவுண் சுகர் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
வென்னிலா அசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் – தேவையான அளவு

செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் சல்லடையை வைத்து மைதா மா ,சோள மா, உப்பு ,பேக்கிங் சோடா போன்ற எல்லவற்றையும் சேர்த்து அதை நன்றாக சளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு பாத்திரத்தில் சக்கரை , ப்ரவுண் சுகர் , வெண்ணெய் இந்த மூன்றையும் நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் கொஞ்சம் வென்னிலா அசன்ஸ் மற்றும் சளித்து வைத்த மாவு பாதி அளவு சாக்லேட் சிப், பால் ஊற்றி நன்றாக கலக்கி எடுக்க வேண்டும்.

பின்னர் மீதி இருக்கின்ற சளித்த மாவையும் போட்டு கொஞ்சம் பால் ஊற்றி நன்றாக கலக்கி எடுத்து கொள்ளலாம்.

பின்னர் இந்த கலவையை ஒரு மணி நேரம் குளிர்பெட்டியில் வைத்து எடுக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து சமமாக உருட்டி எடுக்க வேண்டும்.

பின்னர் அந்த உருண்டைகளில் மேலால் இரண்டு சாக்லேட் சிப்களை வைத்து கொஞ்சம் தட்டையாக்கி பேக் செய்து எடுத்தால் அருமையான சுவையில் சாக்லேட் குக்கீஸ் தயார்.

Back to top button