ஆன்மிகம்

இந்த ராசி பெண்களை காதலிக்கிறவங்க கொடுத்து வச்சவங்க…ஏன்னு தெரியுமா?

பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் அது அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்துவிடாது. சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பன்னிரெண்டு ராசிக்காரர்களும் தனித்தனி ஆளுமை மற்றும் விசேட குணங்கள் கொண்டவர்கள்.

அந்த வகையில் காதலிப்பவருக்கு மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்கள். காதலிப்பவரின் ரகசியங்களை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

இந்த ராசியினர் கொடுக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் காப்பாற்றுவார்கள். இறுதிவரை காதலுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் தங்களுடைய சொந்த பந்தத்தை மிகவும் மதிக்கிறார்கள். மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்.

இவர்கள் காதலுக்கு கடினமான சூழ்நிலையில் உதவுவார்கள் காதலிப்பவர் எவ்வளவு மோசமாக நடத்தினாலும் இவர்கள் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.

கன்னி

கன்னி ராசசியினர் சின்ன சின்ன விஷயங்களை கூட பகுப்பாய்வு செய்யும் இயல்புடையவர்கள். இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஒழுக்கமாக நடந்துக்கொள்வார்கள்.

இந்த இயல்பு அவர்களது கடமைகளை செய்ய தூண்டுகின்றது.இவர்கள் துணைக்கு மிகவும் உண்மையாக நடந்துக்கொள்வார்கள்.

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் பிறந்த பொண்கள் நம்பகத் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்கள்.

காதலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்கள் இதற்கு எப்போதும் உண்மையாக நடந்துக் கொள்வார்கள்.எந்த சூழ்நிலையிலும் துணையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

Back to top button