ஏனையவை

மீதமான இட்லி மா-வில் மொறு மொறு கார போண்டா

பொதுவாகவே வீட்டில் அரைக்கும் அல்லது பிசைந்து வைக்கும் மா ஆனது மீதம் ஆகும்.

அதை ஒரு சிலர் வேறு உணவிற்கு பயன்படுத்துவது உண்டு. ஆனால் சிலர் வீசி விடுவார்கள். அந்தவகையில் மீதம் இருக்கும் மா வைத்து எப்படி காரமான மொறு மொறு போண்டா செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 2 சிறிய பல்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை

செய்முறை
முதலில் வெந்நீரில் ஊற வைத்த சிவப்பு மிளகாயுடன் பூண்டு மற்றும் வெந்நீர் கலந்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் இட்லி மா ஊற்றி அரைத்து வைத்ததை சேர்த்து கலக்கவும்.

பிறகு அரிசிமா மற்றும் ரவை சேர்த்து கலந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
அதை மாவில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து போண்டா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகியவுடன் போண்டாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான இட்லி மா போண்டா தயார்!

Back to top button