காரம் அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?
பொதுவாகவே காரம் சேர்ந்த உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது நல்லது. அதை தொடர்ந்து சாப்பிடுவதால் தான் உடலில் பல விதமான பிரச்சனைகளை சந்திப்பதாக இருக்கும்.
இந்த பாதிப்பானது தொண்டையில் இருந்து தொடங்கி மலத்துவாரம் வரை பிரச்சனைகளை உருவாகின்றது. கார உணவுகளை எடுப்பதில் நல்ல விஷங்களும் இருக்குறது அதே சமயம் அதில் அதிக பாதிப்புகளும் இருக்கிறது.
அதிகமாக கார உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது கண்ணில் இருந்து தண்ணீர் வருவது, மூக்கி இருந்து தண்ணீர் வருவது காதுகள் சிவந்து போவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
அல்சர்
உணவில் மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால் நமக்கு வயிற்று அல்சர் ஏற்படக்கூடும். நீண்ட காலத்திற்கு இந்த அல்சர் தொடருமானால் அது உயிருக்கும் ஆபத்தானதாக முடியக் கூடும். மிளகாயிலுள்ள அஃப்லடாக்சின் என்னும் பொருள் காரணமாக அல்சர், கல்லீரல் அலர்ஜி மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்றவை கூட உருவாகும்.
செரிமான பிரச்சினைகள்
மிளகாயில் உள்ள காரம் காரணமாக நமது செரிமான கட்டமைப்பில் எரிச்சல் உணர்வு ஏற்படக்கூடும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளெக்ஸ், வயிற்றுப்போக்கு அல்லது பசி இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக காரமான உணவுகளை சாப்பிடும்போது முதலில் திருப்தியான உணர்வு ஏற்பட்டாலும் கூட, பிறகு அது தொந்தரவை ஏற்படுத்தும்.
குமட்டல் மற்றும் வாந்தி
காரசாரமான உணவுகளை சாப்பிடும்போது அந்த சமயத்தில் சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகமாக இருக்கும். ஆனால், சாப்பிட்டு முடித்த பிறகு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ஒருவேளை நீங்கள் அதிகமான காரம் எடுத்துக் கொண்டால் உங்கள் வயிற்றை குளுமைப்படுத்துவதற்கு ஐஸ்கிரீம், வெண்ணெய், குளிர்ந்த பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்
மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும்போது உடலில் என்டோர்பின்ஸ் என்னும் ஹார்மோன் சுரப்பு ஏற்படும். இந்த ஹார்மோன் நமது உடலில் வலி அல்லது ஸ்ட்ரெஸ் அளவுகளை அதிகரிக்கும்.
வாய்ப்புண்
மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுக்கு மட்டும் கெடுதல் அல்ல. வாயிலும் கூட அது புண்களை ஏற்படுத்தும். இதனால் கட்டுப்படுத்த முடியாத வாந்தி வரலாம். சில சமயம் வாயில் எரிச்சல் உணர்வு ஏற்படும். வாயில் உள்ள புண்கள் காரணமாக நோய் தொற்று ஏற்படக்கூடும்.
அதிகமாக வியர்ப்பது
பொதுவாக வெயில் காலங்களில் அல்லது நாம் உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் நம் உடலில் மிகுதியாக வியர்வை ஏற்படுவது இயல்பான விஷயம்தான்.
ஆனால், வியர்காத இடம் என்று நினைக்கக் கூடிய நமது மேல் உதட்டிலும் கூட வியர்வையை வரவழைக்கக் கூடியது இந்த மிளகாய். சாப்பிடும் போதே கண்களில் நீரை வரவழைக்கும். மிளகாய் சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாகவே வியர்வை அதிகமாக சுரக்கிறது.