ஆன்மிகம்

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா? தெரிஞ்சா இந்த தவறை செய்ய மாட்டீங்க

சனீஸ்வரன் என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இவருடைய வாகனமாக காகம் கருதப்படுகிறது. இவர் சூரியபகவானுக்கும் சாயா தேவிக்கும் புத்திரனாக பிறந்தார். இவருக்குடைய சிறந்த கிழமையாக விளங்குவது சனிக்கிழமையாகும். என்னதான் சனிபகவான் ஒரு கடவுளாக இருந்தாலும் அவரை நேருக்கு நேராக நின்று வழிபட கூடாதென்று கூறுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இவர் நவக்கிரகங்களின் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் எப்படி இருக்கிறதோ அதே போல தான் அவரின் ஆயுள்காலமும் அமையும்.

சனியின் பார்வை நேருக்கு நேராக நாம் பார்த்து வணங்க கூடாது என்பதற்கான காரணம். சனியை போல் கெடுப்பாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்ற ஒரு வாசகம் கேள்விப்பட்டிருப்போம். இதனால் தான் சனி பகவானை கண்டு எல்லோரும் பயப்படுவார்கள்.

ஒருவரின் ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கொடுத்து, பலவிதமான துன்பங்கள், இழப்புகளை ஏற்படுத்தி, அந்த ராசி விட்டு அடுத்த ராசிக்கு செல்லும்போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியை கொடுத்து விட்டு செல்வார் என்பது நம்பிக்கையாகும்.

புராணக் கதைகளின் அடிப்டையில் ராவணன் கூட சனியின் பார்வையால் இராமனிடம் மடிந்தான். இந்த காரணத்திற்காக தான் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது என்று கூறப்படுகின்றது.

சனியின் பார்வை நம் மீது படும் போது நமக்கு ஏழரை சனி ஆரம்பமாகும். எனவே சனிக்கிழமைதோறும் நவகிரகங்களையும், சனி பகவானையும் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம்.

இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.

Back to top button