நீங்க அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்காதீங்க… அது ஆபத்தில் முடியுமாம்
பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டால் பலரும் தண்ணீர் பருகுவதை அதிகமாக விரும்புவதில்லை. ஆனால் சிலர் தனது பசியை கட்டுப்படுத்த அடிக்கடி தண்ணீர் அருந்துவதை வழக்கமா வைத்திருப்பார்கள். நாள் ஒன்றிற்கு 3 லிற்றர் தண்ணீர் பருகுவதை தவிர்த்து வருகின்றனர். சிலர் குறித்த அளவு தண்ணீர் குடிப்பதையும் தாண்டி அதிகமாக பருகி வருகின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் நீரிழப்பு ஏற்படுவதுடன், பக்க விளைவும் ஏற்படுகின்றது.
அதிகம் தண்ணீர் குடித்தால் என்னவாகும்?
சிறுநீரின் நிறததை வைத்து நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ளலாம். அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதின் மோசமான அறிகுறியாகும். வெளிர் நிறத்தில் இருந்தால் எந்தவொரு பிரச்சினை இல்லாமல் சரியாக இருப்பதாக அர்த்தம். வெள்ளை நிறத்தில் இருந்தால் நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். தண்ணீர் குடிப்பதில் அளவை கவனிக்க வேண்டும். இது போன்று அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் தேவையானதை விட அதிக தண்ணீர் பருகுகின்றீர்கள் என்று அர்த்தம். நாள் ஒன்றிற்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது சாதாரணமானது.
இதே போன்று அதிகளவு தண்ணீர் பருகினால் ஹைபோநெட்ரீமியா பிரச்சினை ஏற்படுவதுடன், ரத்தத்தில் சோடியம் அளவு குறைவதுடன், சோர்வும் ஏற்படு
உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவும் எலக்ட்ரோலைட்டுகள் சம நிலையை பராமரிக்க நீர் உதவுகின்றது. அதிக தண்ணீர் பருகும் போது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்வதுடன், கை, கால் மற்றும் உதடுகளில் வீக்கம் ஏற்படலாம்.
அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும் போது ரத்தத்தில் சோடியம் அளவை குறைத்து, மூளையின் செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்படும். அதிகளவு தண்ணீர் பருகுதல் எலக்ட்ரோலைட் அளவு குறைந்து உடல் சமநிலை மாறுபடுவதுடன், கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலி, தசை பிடிப்பு ஏற்படலாம்.