உடல்நலம்

நீங்க தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க! முடி அசுர வேகத்தில் கொட்டுமாம்

தலைக்கு எண்ணெய் தடவுவது என்பது மனிதர்கள் வழக்கமாக பின்பற்றுவது ஆகும்.

சமீப காலமாக தலைக்கு உண்ணை தடவுவதால் எந்த பயனும் இல்லை என்று தோல் நிபுணர்கள் குறிப்பிட்டாலும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் தலைக்கு எண்ணெய் வைத்தால் முடிக்கு தேவையான ஊட்டச்சது கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இதில் எது சரியான விஷயம் என்பதை விட தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது முடி உதிராமல் எவ்வாறு எண்ணெய் தேய்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க! முடி அசுர வேகத்தில் கொட்டுமாம் | Don T This Mistake When Applying Oil To Your Scalp

எண்ணெய் தேய்க்கும் முறை

  1. தலைக்கு எண்ணை வைத்ததும் சிலர் தலையை மசாஜ் செய்கிறார்கள். மசாஜ் செய்வது நல்லது தான். ஆனால் நாம் இந்த விஷயத்தில் செய்யும் தவறு முடிகளின் வேருக்கு மசாஜ் கொடுக்காமல் தலைமுடியை மசாஜ் செய்வது. இவ்வாறு செய்வதால் தலைமுடி உதிரும்.மசாஜ் முடியின் வேர்கால்களுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.

2.இரவில் முடிக்கு எண்ணை தேய்க்கக் கூடாது. இரவில் முடிக்கு எண்ணை தேய்ப்பதால் முடி வளரும் என பலர் நம்புகின்றனர். ஆனால் அது தவறு தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு முடிக்கு எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது.

3.எண்ணெய் தேய்த்து விட்டு சீப்பை பயன்படுத்தி முடியை சீவக்கூடாது. இவ்வாறு செய்வதால் முடி கூடுதலாக சீப்பிலேயே உதிர்ந்து வரும். இதற்கு காரணம் முடிக்கு எண்ணை தேய்க்கும் போது முடியின் வேர்க்கால்களில் உள்ள துளைகள் திறந்திருக்கும் இந்த நேரத்தில் முடியை சீப்பை கொண்டு சீவினால் முடி தாராளமாக கொட்டும்.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க! முடி அசுர வேகத்தில் கொட்டுமாம் | Don T This Mistake When Applying Oil To Your Scalp

4.எண்ணெய் தேய்த்த பின் முடியை இறுக்கமாக கட்டவோ பின்னிப்போடவோ கூடாது. அவ்வாறு செய்தால் தலையில் அதிக அழுத்தம் ஏற்பட்டு முடி வேரோடு உதிரும். எனவே முடிக்கு எண்ணெய் தேய்த்ததும் தலைமுடியை மிகவும் தளர்வாக விட வேண்டும்.

தலைக்கு எந்த எண்ணெய் வேண்டுமானாலும் தேய்க்கலாம் அப்படி தேய்க்கும் போது எண்ணெயை விரல்களில் தொட்டு வேர்க்கால்களில் மட்டும் அப்ளை செய்ய வேண்டும்.

நகங்களால் வேர்க்கால்களைத் தேய்க்கக் கூடாது. முடி முழுவதும் எண்ணெய் தேய்க்கக் கூடாது.அப்படி செய்தால் முடி உதிர்தல் அதிகமாகும்.

Back to top button