இலங்கை

மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் குழுவொன்று முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் முட்டை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Back to top button