குளிர்காலத்தில் சளி இருமலுக்கு முடிவு கட்ட பூண்டு தான் பெஸ்ட் சாய்ஸ்
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெளிப்படையாக, தொண்டை மற்றும் நுரையீரலில் சளி படிவதால் கடுமையான இருமல் மற்றும் தொண்டையில் வலியை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபட ஒரு சிறந்த சமையலறை மூலிகையான பூண்டை எவ்வாறு பயன்படுத்தவாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டின் நன்மைகள்
உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பூண்டு மிக முக்கிய இடம் வகிக்கின்றது.
குளிர்காலத்தில் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்றதை எதிர்த்து போரிடும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
புற்றுநோய் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் பூஞ்சையுடனும் எதிர்ப்பாற்றலை வெளிப்படுத்தும் தன்மையை பூண்டு தன் வசம் கொண்டுள்ளது. பூண்டில் மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் அதிகளவு நிறைந்துள்ளன.
வைரஸ் மற்றும் பேக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருத்துவ உணவாகப் பார்க்கப்படுகிறது. உணவியல் நிபுணர்கள் பூண்டைத் தவறாமல் சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்கள்.
இது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கான அபாயத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த சர்க்கரை அளவு என்பவனவற்றை குறைக்க விரும்பினால், தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
பூண்டில் சல்பர், ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளன. அவை நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு நாளும் பூண்டு சாப்பிடுவதன் வாயிலாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதனால் லேசான தொற்று நோய்களில் இருந்து நம்மை எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மையை அகற்ற உதவும் பூண்டு, தேவையில்லாத கொழுப்பையும் கரைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
குளிர்கால நிலையில் ஏற்படும் காய்ச்சல், சளியால் மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை புண் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.