சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் எரிவாயு பயன்பாடு தொடர்பில் வெளியான நல்ல செய்தி!
சுவிஸில் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு அபூர்வமாக ஒரு நல்ல செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா ஆற்றல் வழங்கும் நிறுவனமான SIG, ஆற்றல் கட்டணம் குறைய இருப்பதாகத் தெரிவித்துள்ளது. நாளை முதல், எரிவாயு கட்டணம் 7 சதவிகிதம் குறைய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் குறைந்துவருவதாலும், குளிர்காலத்தில், எதிர்பார்ப்பை விட டிமாண்ட் குறைந்ததாலும், இந்த கட்டணக் குறைப்பு சாத்தியமானதாக SIG நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டணக் குறைப்பால் 40,000 வாடிக்கையாளர்கள் பலனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.