இலங்கை

ஆசிரிய மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுவரும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (20-02-2024) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது, எம்.பி டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.

இந்த நிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5000 ரூபாவில் இருந்து 8000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் அதற்கு நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன், நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.

இதன்படி, 8000 ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button