சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து முழுவதும் வீட்டு வாடகை உயர்வு!

சுவிட்சர்லாந்திலுள்ள கிட்டத்தட்ட அனைத்து முனிசிபாலிட்டிகளிலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் 85 முனிசிபாலிட்டிகளில், 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகைகள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

இது முந்தைய ஆண்டைவிட அதிகம் என்பதுடன், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த அளவுக்கு வாடகை உயர்ந்துள்ளது இப்போதுதான் என்கின்றன, UBS வங்கி மேற்கொண்ட சுவிஸ் ரியல் எஸ்டேட் ஆய்வு ஒன்றின் சமீபத்தைய முடிவுகள். அனைத்து முனிசிபாலிட்டிகளையும் ஒப்பிடும்போது, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்தான் அதிக அளவில் வாடகை உயர்ந்துள்ளது. சூரிச்சில், ஆண்டுக்கு சுமார் 11 சதவிகிதம் வாடகை அதிகரித்துள்ளது என்கிறது அறிக்கை ஒன்று.

Back to top button