உடல்நலம்

உடல் பருமனை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி?

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் வலிமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக ஒரு சிலர் தங்களுக்கு விருப்பமான உணவுகளையும் தவிர்த்துக்கொள்வது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் பிரியாணியை உடல் எடை குறைக்க விரும்புவர்கள் தவிர்த்துக்கொள்வார்கள்.

நாவில் எச்சில் ஊறினாலும் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதே என்ற கவலையில் அதை சாப்பிடமாலே இருப்பார்கள். அந்த கவலை இனி வேண்டாம். உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் பிரியாணியும் சாப்பிடலாம். எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்
கொள்ளுப்பயிர் – 500 கிராம்
கேரட் – 100 கிராம்
பீட்ரூட் – 100 கிராம்
காலிபிளவர் – 50 கிராம்
தக்காளி – 3
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி,பூண்டு விழுது – சிறிதளவு
மட்டன் மசாலா, கரம் மசாலா- காரத்திற்கு ஏற்ப
உப்பு – சுவைக்கு ஏற்ப
நெய்- 50 கிராம்

செய்முறை
முதலில் கொள்ளுப்பயிரை கல் உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

பின் கேரட், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி, பெரிய வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, ரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கி வைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் மட்டன் மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடங்களுக்கு வதக்கவும்.

காய்கறிகள் வெந்தவுடன் கொள்ளு பயிரை சேர்த்து கிளறி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இறுதியாக புதினா, கொத்தமல்லி தூவி பரிமாறினால் உடல் எடையை குறைக்கு கொள்ளு பிரியாணி தயார்.

Back to top button