விளையாட்டு

ஆசிய கோப்பை 2023 இல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 147 ஓட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் அடுத்தநாள் ரிசர்வ் டேவில் , விடப்பட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கியது. இதில் விராட் கோலியும், கே எல் ராகுலும் தங்களுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்கள். குறிப்பாக காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள கே.எல். ராகுல் 106 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ஓட்டங்கள் என பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது. இதனை தொடர்ந்து 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தங்களது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானை காட்டிலும் இன்று சிறப்பாக செயல்பட்டது. இந்திய வேகப்பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் இமாமுல் ஹக் 9 ஓட்டங்களிலும் பாபர் அசாம் 10 ஓட்டங்களிலும் முகமது ரிஸ்வான் இரண்டு ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 32 ஓவரில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் சிறப்பாக பந்து விஷய குல்திப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Back to top button