இலங்கை

பெப்ரவரி 5 அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்தவர் ​​4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button