இந்தியா

நடிகர் விஜய் நடத்தும் அரசியல் கட்சி மாநாடு: எங்கு தெரியுமா?

நடிகர் விஜய் நடத்தும் அரசியல் கட்சி மாநாடு இப்போது எங்கிருந்து தொடங்குகிறார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் அடுத்தக்கட்டமாக பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளாராம்.

விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு ”தமிழக முன்னேற்றக் கழகம்” என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடைய கட்சியில் பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்க உள்ளாராம் விஜய்.

மேலும், ஊழல் செய்துவிட்டு பிற கட்சிகளில் இருந்து அதீத செல்வாக்குடன் வந்தாலும் அவர்களை தன் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் விஜய்.

அதேபோல, சினிமா பிரபலங்களுக்கும் தன் கட்சியில் பெரிய அளவில் முக்கியத்துவம் விஜய் கொடுப்பாரா என்பது சந்தேகம் என்கிறனர்.

அதேபோல, ஏப்ரலில் நடக்க இருக்கும் தனது பிரமாண்டமான அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த இருக்கிறாராம் விஜய். மதுரை எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு ராசியான இடம்.

குறிப்பாக, விஜயின் ஆரம்பகாலத்தில் சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்த் கட்சி மாநாட்டைத் தொடங்கிய இடமும் இதுதான் என்பதால் மதுரையைத் தேர்ந்தெடுத்துள்ளாராம் விஜய். இந்த மாநாட்டில் பிரியாணி, கிடா விருந்து என்று களைக்கட்டப் போகிறதாம் இந்த மாநாடு.

Back to top button