இலங்கை

நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!

இலங்கையில் மின்சார நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை மின்சார சபையின் CEBCare விண்ணப்பம், ஒன்லைன் வங்கி சேவைகள், மின்சார சபை இணையதளம், தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பணம் செலுத்துவதற்கு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலங்கை மின்சார சபை உட்பட 1987 என்ற மத்திய இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Back to top button