ஆன்மிகம்

கன்னி ராசியினர் தவறியும் இந்த நிறங்களை பயன்படுத்த கூடாதாம்… ஏன்னு தெரியுமா?

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசிக்கும் அவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிறத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் கன்னி ராசியினருக்கு துர்திஷ்டத்தை ஏற்படுத்தும் நிறங்கள் தொடர்பிலும் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரகங்களைப் போலவே, நிறங்களுக்கும் நமது வாழ்க்கையை நம் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் சக்தி உள்ளது. நீங்கள் சில நிறங்களை அணியும் போது, நீங்கள் சற்று ஒளிமயமாக இருப்பது போல் உணர்ந்திருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்
நீல நிறம்

அந்த வகையில் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களின் பட்டியலில் நீல நிறம் முதலிடம் பெறுகின்றது. கன்னி ராசியினர் நீல நிறத்தை அதிகமாக பயன்படுத்தும் போது இவர்களின் உற்பத்தி திறன் இயல்கானவே அதிகரிக்கும். இந்த நிறத்திலான ஆடைகளை அணிந்தால் மன அமைதி கிடைக்கும்.

வெள்ளை நிறம்

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே தகவல் தொடர்பு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். வெள்ளை நிறம் உங்கள் மனதில் இருந்து அனைத்து தேவையற்ற எண்ணங்களையும் நீக்குகிறது. இதனால் தெளிவான சிந்தனையுடன் வாழ்வில் முன்னேற வாய்ப்பு ஏற்படுகின்றது.

பச்சை நிறம்

கன்னி ராசியினருக்கு ஆற்றலை அதிகரிப்பதில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெருகின்றது. கன்னி ராசிக்காரர்களுக்கு பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட நிறங்களில் ஒன்று பச்சை, இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்தினால் வாழ்வு பணப்பிரச்சினைகள் இன்றி செழிப்பாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமான நிறங்கள்
ஊதா நிறம்

மற்றவர்கள் விலையுயர்ந்த மற்றும் சக்திவாய்ந்ததாக தோற்றமளிக்க ஊதா நிறத்தை அணியும்போது, கன்னி ராசிக்காரர்கள் இதை தவிர்க்க வேண்டியது அவசியம். கன்னி ராசியினரின் இலக்குகளை குழப்புவதாக இந்த நிறம் காணப்படுவதால் இதை தவிர்ப்பது நல்லது.

சிவப்பு நிறம்

பொதுவாக, நாம் சிவப்பு நிறத்தை ஆபத்து மற்றும் அச்சுறுத்தலுடன் ஒப்பிடுவது வழக்கம். சிவப்பு நிறம் பொதுவாகவே எதிர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்த கூடியது. குறிப்பாக இந்த நிறம் கன்னி ராசியின ருக்கு பாதகமான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

Back to top button