விளையாட்டு
முதலாவது விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாண வியாஸ்காந்

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.