இலங்கை

மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை 15, 2024 பெப்ரவரி முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

குறித்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் இ டைநிறுத்தப்பட்டது.எனினும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Back to top button