ஏனையவை
130 பேருக்கு தங்கக்காசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

சமீபத்தில் தசரா படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய ஊழியர்கள் 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசுகளை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார்.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.