இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!

இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தது.
இதுவரை 18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.