உலகச் செய்திகள்

60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சி கண்ட சீனாவின் மக்கள்தொகை!

உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடுகளில் முதல் நாடாக இருந்த சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக , சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் அறிவித்துள்ளது.

2022இல் மக்கள் தொகை 1.4118 பில்லியன் என கூறப்படுகின்ற நிலையில், இது 2021ஆம் ஆண்டில் இருந்து 850,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 7.52 ஆகக் குறைந்துள்ளது என்று சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறப்புகள் கடந்த ஆண்டு முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக இறப்பு வீதத்தை பதிவு செய்துள்ளது.

1,000 பேருக்கு 7.37 இறப்புகள் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டில் 7.18ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Back to top button