ஆன்மிகம்

மார்ச் 7 இல் மீன ராசிக்குள் நுழையும் புதன் பகவான்; வெற்றிகள் குவியவுள்ள இராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும் இவரே ஆவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், வாழ்வின் இந்த அம்சங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவே மோசமான நிலையில் இருந்தால் மோசமாக இருக்கும். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் (07.03.2024) ஆம் ததி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். முக்கியமாக புதன் அஸ்தமன நிலையில் தான் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். புதன் உதயமாவதால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் இருந்த தடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாரயங்களைப் பெறுவீர்கள்.

பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.

வேலை செய்வர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

புதிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button