உடல்நலம்

Masala Tea: சளி காய்ச்சலுக்கு தீர்வளிக்கும் மசாலா டீ தயாரிப்பது எப்படி?

பெரும்பாலான நபர்களுக்கு காலைப்பொழுது விடிவதே டீ-யுடன் தான், டீ பருகினால் மட்டுமே அன்றையநாள் உற்சாகமாக தொடங்கும்.

டீ-யில் பல வகைகள் இருந்தாலும் இஞ்சி, மிளகு, பட்டை, கிராம்பு சேர்த்த மசாலா டீ-யை ஒருமுறை சுவைத்து பாருங்கள், அதன் ருசிக்கு அடிமையாகிவிடுவீர்கள்.

வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து குடித்தால் இன்னும் பல நன்மைகளை பெறலாம்.

சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்படும் நபர்களுக்கு தொண்டை இதமான பானமும் இதுவே.

ஏனெனில் இதில் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த இஞ்சி, மிளகு, பட்டை, கிராம்பு என இவை அனைத்தையும் சேர்க்கிறோம்.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கின்றன, இதனால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவடைகிறது.

தேவையான பொருட்கள்
தண்ணீர்- 2 கப்
தேயிலை தூள்- அரை தேக்கரண்டி
இஞ்சி- கால் தேக்கரண்டி (தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்)
மிளகு- கால் தேக்கரண்டி
பட்டை- சிறிதளவு
கிராம்பு- 2
வெல்லம்- தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும், தண்ணீர் கொதித்தவுடன் தேயிலை தூள் உட்பட மசாலா பொருட்களை சேர்க்கவும்.

அடுப்பை குறைத்து வைத்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும், பின்னர் வடிகட்டி வெல்லம் சேர்த்து அருந்தலாம்.

Back to top button