ஆன்மிகம்

மகாலட்சுமி வீடு தேடி வரணுமா? இந்த செடிகளை வளர்க்க மறக்காதீர்கள்

ஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு ஒரு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கிறது என்பதால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சிறப்பு நிலை அதற்கு உள்ளது.

மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன.

துளசி
வீட்டிற்கு முன்பு துளசிச் செடியை வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான பலன்களைக் கொடுக்கக் கூடியது.

துளசி பெருமாளுக்கு உகந்தது. அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் உடல் நலத்திற்கு தேவையான சுத்தமானக் காற்று கிடைக்கிறது.

மருதாணி, மாதுளை
பாரிஜாதம், மல்லிகை, முல்லை, செண்பகம், நித்தியமல்லி மற்றும் வாசமுள்ள பூச்செடிகள் போன்றவற்றை வீட்டிற்கு முன்னால் வைத்து லட்சுமி கடாட்சத்தை அளிக்கும். மருதாணி மற்றும் மாதுளை செடிகளையும் வீட்டிற்கு முன்னால் வைத்து வளர்த்தால் லட்சுமி கடாட்சமும் உண்டாகும். அதிர்ஷ்டமும் பெருகும்.

மஞ்சள் அரளி பூக்கள்
மஞ்சள் கலரில் பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும் செடி இது. இதனை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. செம்பருத்தி பூக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும்கூட சிவப்பு வண்ணமே சிறந்தது.

மருத்துவ குணம் வாய்ந்தது. வீட்டின் பின் பக்கம் கற்றாழை மருத்துவ குணம் நிறைந்தது. கற்றாழைச்செடிகள் பூக்கும் போது வீட்டில சுப நிகழ்வுகள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

மனோரஞ்சிதம்
மகாலட்சுமி நிலை வாசலுக்குள் நிலையாக வருகை தர வேண்டும் என்றால் உங்கள் வீட்டு வாசல் பகுதியில் மனோரஞ்சித செடியை வளர்க்க வேண்டும். மகாலட்சுமியின் வருகையை நீங்களே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இது தவிர உங்கள் வீட்டிற்கு வரும் எதிரிகள் கூட இந்த செடியை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது உங்களுடைய நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு வசிய தன்மை கொண்ட செடி தான் இது.

புரசுமர கட்டை
புரசு மரத்தில் இருக்கும் ஒரு சிறிய குச்சியை மட்டும் எடுத்து அதை சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து தினம்தோறும் அதைத் தொட்டு வழிபாடு செய்து வந்தால் உங்கள் பண பிரச்சனை தீரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் வீட்டின் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத் தொடங்கும். நம்பிக்கையுடன் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும். செல்வ வளம் பெருகும்.

Back to top button