இலங்கை

யாழில் பாரிய விபத்து சம்பவம்: சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாண பகுதியில் அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 54 வயதான சண்முகதாஸ் தர்மதாஸ் என்ற வர்த்தகரே நேற்றையதினம் (17-02-2024) உயிரிழந்துள்ளார்.

யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலைய ஒன்றை நடத்தி வந்த அவர், கடையை மூடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அம்பூலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த நிலையில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Back to top button