இலங்கை

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவமானது நேற்று(17.02.2024) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய விநாயகம் என அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருகின்றார். குறித்த நபர் கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில், வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த உந்துருளி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Back to top button