இலங்கை

நாட்டில் இன்று முதல் அழுலுக்கு வரும் பல அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை!

நாட்டில் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பல அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் (15-02-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறைக்கப்பட்ட பொருட்களின் விலை பட்டியல் இதோ, சிவப்பு கௌபி – 1095 ரூபா, வெள்ளை கௌபி – 1200 ரூபா, சிவப்பு வெங்காயம் – 325 ரூபா, முந்திரி – 1300 ரூபா, டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் – 575 ரூபா, காய்ந்த மிளகாய் – 1210 ரூபா, வெங்காயம் – 365 ரூபா, வெள்ளை சீனி – 275 ரூபா, உருளைக்கிழங்கு – 299 ரூபா, சிவப்பு அரிசி – 174 ரூபா, டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – 290 ரூபா, மற்றும் பாஸ்மதி அரிசி (பிரீமியம்) – 760 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது.

Back to top button