சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் திடீர் புயல் காரணமாக ஒருவர் பலி, 15 பேர் வரை காயம்

சுவிட்சர்லாந்தில் நேற்று அடித்த புயலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார், சுமார் 15 பேர் வரை காயமடைந்துள்ளார்கள். திடீர் புயல் சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் நேற்று அடித்த கடும் புயலில் La Chaux-de-Fonds நகருக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புயல் தனது 50 வயதுகளில் இருக்கும் ஒருவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது, கிரேன் ஒன்று விழுந்ததில் அவர் பலியாகிவிட்டார் என Neuchâtel மாகாண பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலும், பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அவசர உதவிக்குழுவினர் சிகிச்சையளித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. உண்மையில், புயல் சிறிது நேரமே அடித்தாலும், மணிக்கு 217 கிலோமீற்றர் வேகத்தில் அடித்த காற்று பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

Back to top button