உடல்நலம்

Paneer Butter Masala: கறி சுவையை மிஞ்சும் பன்னீர் பட்டர் மசாலா: ரெசிபி இதோ

பன்னீர் பட்டர் மசாலா இந்தியாவின் மிகவும் பிரபலமான ரெசிபிகளில் ஒன்றாகும்.

இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் அடிமையாக்கிவிடுகின்றன.

இந்த சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி, நாண், சாதம் என அனைத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.

அந்தவகையில், சுவையான பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பன்னீர்- 200g
வெண்ணெய்- 5 ஸ்பூன்
வெங்காயம்- 1
உப்பு- தேவையான அளவு
தக்காளி- 4
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 3 பல்
முந்திரி- 6
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்- 2
பிரியாணி இலை-1
கரம் மசாலா- ½ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
சர்க்கரை- ½ ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி- 1 ஸ்பூன்
பிரெஷ் கிரீம்- 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு வாணலில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய பொருட்களை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் 3 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் அதில் அறைத்த மசாலா சேர்த்து கிளறவும்.

இதனை தொடர்ந்து அதில் கரம் மசாலா, காஸ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் இதில் சர்க்கரை சேர்த்து கிளறி வெட்டிவைத்த பன்னீர் சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும்.

இறுதியாக இதில் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து பிரெஷ் கிரீம் சேர்த்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

Back to top button