இலங்கை

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோர ஹெலியில் வந்த நபர்கள்

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி, ஹெலியில் வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி, கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை (21) வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த விசேட குழுவில் பொலிஸ் சட்டப்பிரிவு பணிப்பாளர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்கிரம உள்ளிட்டவர் உள்ளடங்கியுள்ளனர். மனு மீதான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (22) எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்து நீதிமன்று இன்றைய தினமே கட்டளை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலுக்கு தடை கோரி, யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு புதன்கிழமை (20) நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை (21) கொழும்பில் இருந்து வந்த குழுவினால் மீள மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Back to top button