இலங்கை

யாழ்ப்பாணத்தில் இரவு பயணிகள் பேருந்துகளில் அதிரடி சோதனையில் இறங்கிய பொலிஸார்!

யாழ்ப்பாணத்தில் பயணிகள் பேருந்துகளில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில், போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு பூராகவும் இன்று 6.00 மணி தொடக்கம் இரவு10.00 மணிவரை பயணிகள் பேருந்துகள் பொலிஸாரால் மோப்பநாயின் உதவுயுடன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி, யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு அமைந்துள்ள செம்மணி சந்திப்பகுதியில் யாழிலிருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளும் சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்றது.

மேலும், யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அனும்பமால் தலைமையிலான போக்குவரத்து பொலிசாரால் பேருந்துகளில் பயணிப்போரின்உடைமைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு பேருந்துகளும் முழுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

Back to top button