இலங்கை
அமைச்சர்களிடம் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!
இலங்கை அமைச்சர்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு யானதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் வரிகள் மூலம் ஈட்ட நினைத்திருந்த வருவாய், குறைவாகத்தான் கிடைக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.