இலங்கை

ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள ரணில் விக்ரமசிங்க!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில் அண்டைய நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது , ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button