ஆன்மிகம்

மாதத்தின் தொடக்க நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

தற்போதைய உலகில் கையில் பணம் காசு இல்லாதவர்களுக்கு மதிப்பே இல்லை.

அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.

பணம் இருப்பவர்களை தான் இந்த உலகம் மதிக்கும். பணம் இல்லாதவர்களை இந்த உலகம் தூக்கிப் போட்டு மிதிக்கும்.

கையில் பணம் காசு தங்கவில்லை என கவலையடைபவர்கள் இன்றைய தினம் (01.02.2024) பெப்ரவரி மாதத்தின் தொடக்க நாளான வியாழக்கிழமை அன்று பிறக்கின்றது.

ஒரு மாதத்தின் தொடக்க நாளில் நாம் என்ன நல்ல காரியம் செய்கின்றோமோ அதற்குண்டான பலன் அந்த மாதம் முழுவதும் நமக்கு கிடைக்கும்.

இந்த மாதம் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். அடுத்த மாதம் முழுவதும் நிச்சயம் உங்களுக்கு செல்வாக்கான மாதமாகத் தான் இருக்கும்.

வருமானத்தில் பிரச்சனை இருக்கலாம், கடன் பிரச்சனை இருக்கலாம், இப்படி பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபட குருபகவான் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவார்.

பெப்ரவரி முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
கொண்டைக்கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கொண்டைக்கடலையை எடுத்து மாலை கோர்த்துக் கொள்ளுங்கள்.

காலை வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் நாளை மாலை செய்தாலும் தவறு கிடையாது.

27 கொண்டை கடலை, 54 அல்லது 108 கொண்டே கடலை அது உங்களுடைய விருப்பமாக எடுத்துக்கோங்க உங்கள் கையால் கோர்த்த இந்த கொண்டைக்கடலை மாலையை கொண்டு போய் தட்சிணாமூர்த்திக்கு செலுத்தவும்.

இந்த மாதம் முழுவதும் எனக்கு நல்ல வழியை காட்டு குரு பகவானே என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மஞ்சள் நிற பூவை வாங்கிக் கொண்டு போய் குரு பகவானுக்கு செலுத்துங்கள்.

உங்களால் முடிந்தால் இன்று (01.02.2024) உங்க கையில் காசு இருந்தால், அதிலிருந்து ஒரு தொகையை எடுத்து யாராவது ஒருவருக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் பண்ணவேண்டும்.

Back to top button