இலங்கை
அரசாங்கம் உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட திட்டம்
உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் வழக்கு தொடர்பான கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வழக்கு முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வழக்கு பொருள் வைத்திருப்பவர் வழக்கில் தோல்வி அடைந்தால், உரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்கு விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் பல வழக்கு பொருட்கள் அழிவடைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பான சட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.