இன்று முதல் பேருந்துகளில் விசேட நடைமுறை

பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரகசியமான முறையில் கமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.