இலங்கை

குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலின் படி, 2012ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான தரவுகளை அவதானிக்கும் போது, ​​ஒரு இலட்சத்திற்கும் குறைவான புதிய பிறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2013 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான குறைவு தென்படுகின்றது. இதேவேளை, 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் 83,530இனால் புதிய பிறப்புகள் குறைந்துள்ளதாகவும், 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் 62,587இனால் புதிய பிறப்புப் பதிவுகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு பிறப்புப் பதிவு 57,032ஆக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button